சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சு நடத்துகின்ற உள்ளூர் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இன்றைய தினம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டப வளாகத்தில் கண்காட்சி விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிக் கூடத்தை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சிக் கூடத்தில் வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சுயதொழில் உற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற மகளிரின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாணத்தில் அனைத்து துறைகளிலும் மகுடம் சூடிய பெண்கள் கௌரவிக்கப்படுகின்ற நிகழ்வும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அதேவேளை, மகளிர் தின கண்காட்சியும் விற்பனையும் இன்றும் நாளையும் தொடர்ச்சியாக இடம்பெறும் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் சாவகச்சேரியில் ஆரம்பம். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சு நடத்துகின்ற உள்ளூர் உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் இன்றைய தினம் சாவகச்சேரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டப வளாகத்தில் கண்காட்சி விற்பனைக் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இக்கண்காட்சிக் கூடத்தை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சமன் பந்துலசேன உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இக்கண்காட்சிக் கூடத்தில் வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சுயதொழில் உற்பத்திகளை மேற்கொள்ளுகின்ற மகளிரின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.அதேநேரம் பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாணத்தில் அனைத்து துறைகளிலும் மகுடம் சூடிய பெண்கள் கௌரவிக்கப்படுகின்ற நிகழ்வும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அதேவேளை, மகளிர் தின கண்காட்சியும் விற்பனையும் இன்றும் நாளையும் தொடர்ச்சியாக இடம்பெறும் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.