• Sep 27 2026

அதிகாலை நேரத்தில் வைத்தியசாலையில் வெடிப்பு; 7 பேர் காயம்! இருவர் கவலைக்கிடம்

Chithra / Sep 26th 2026, 7:59 am
image


பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.


வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வெடிப்பில் காயமடைந்தவர்கள் சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் எனவும், 

அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அதிகாலை நேரத்தில் வைத்தியசாலையில் வெடிப்பு; 7 பேர் காயம் இருவர் கவலைக்கிடம் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.வைத்தியசாலையின் சமையலறையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெடிப்பில் காயமடைந்தவர்கள் சிறுநீரக வைத்தியசாலை ஊழியர்கள் எனவும், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த வெடிப்புச் சம்பவம் காரணமாக வைத்தியசாலை கட்டிடத்திற்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement