இலங்கையிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான யோசனைகள் நீண்டகால திட்டங்களாகும்.
அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் காத்திருக்க முடியாது.
எனவே குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.
குரங்குகள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாறாக குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி- அமைச்சர் நளிந்த மறுப்பு. இலங்கையிலிருந்து குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான யோசனைகள் நீண்டகால திட்டங்களாகும்.அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் காத்திருக்க முடியாது. எனவே குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.குரங்குகள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாறாக குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.