• Nov 21 2024

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..!

Sharmi / Oct 8th 2024, 5:58 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்று (08) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை  நீடித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையில், 

தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2024 அக்டோபர் 10 ஆம் திகதி  நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன், எக்காரணம் கொண்டும் இந்த திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.



தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் இன்று (08) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த நிலையில் அதனை எதிர்வரும் 10 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை  நீடித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க விடுத்துள்ள அறிக்கையில், தபால்களில் ஏற்படக்கூடிய தாமதங்கள் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 2024 அக்டோபர் 10 ஆம் திகதி  நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அத்துடன், எக்காரணம் கொண்டும் இந்த திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement