நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றும் தொடர்கிறது.
இதன்படி, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக சாமிமலை பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாகக் குறித்த குடியிருப்புகளிலுள்ள சுமார் 24 குடும்பங்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், அவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்றும் தொடர்கிறது. இதன்படி, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக சாமிமலை பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாகக் குறித்த குடியிருப்புகளிலுள்ள சுமார் 24 குடும்பங்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், அவர்கள் தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.