• Feb 13 2025

பிறப்பு, இறப்பு பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு..!

Sharmi / Feb 13th 2025, 12:43 pm
image

யாழ் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர்(தமிழ்மொழி) பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை  இன்றையதினம்(13) வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கோப்பாய், கரவெட்டி பிரிவுகளுக்கான தமிழ்மொழி மூல பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தல்(இலக்கம்- 2415) 13-12-2024ம் திகதி பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17-01-2025 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறுதித்திகதியானது 17-03-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான வர்தமானி அறிவித்தல் 14-02-2025ம் திகதி வெளியிடப்படும் என பதிவாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.


பிறப்பு, இறப்பு பதிவாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிப்பு. யாழ் மாவட்டத்தில் பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர்(தமிழ்மொழி) பதவியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தின் ஊடகப் பிரிவு அறிவிப்பொன்றை  இன்றையதினம்(13) வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பில் யாழ் மாவட்டத்தில் குறிப்பாக வட்டுக்கோட்டை, ஊர்காவற்றுறை, எழுதுமட்டுவாழ், கோப்பாய், கரவெட்டி பிரிவுகளுக்கான தமிழ்மொழி மூல பிறப்பு, இறப்பு, மற்றும் விவாகப்பதிவாளர் பதவிக்கான வர்த்தமானி அறிவித்தல்(இலக்கம்- 2415) 13-12-2024ம் திகதி பிரசுரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17-01-2025 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இறுதித்திகதியானது 17-03-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பான வர்தமானி அறிவித்தல் 14-02-2025ம் திகதி வெளியிடப்படும் என பதிவாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement