இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.
இந்தியாவின் “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலம் காலமாக நல்லுறவைக் கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.இந்தியாவின் “அயல் நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கையினை மீள வலியுறுத்தும் இந்த விஜயமானது, கடல் மார்க்கமாக மிகவும் நெருக்கமான அயல் நாடாகவும் காலம் காலமாக நல்லுறவைக் கொண்ட நண்பனாகவும் உள்ள இலங்கைக்கு இந்தியாவினது தொடர்ச்சியான அர்ப்பணிப்பினை சுட்டிக்காட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.