• Sep 11 2025

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகள் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி

Chithra / Sep 11th 2025, 9:02 am
image

 

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இதனடிப்படையில், இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. 

இது, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் இணையவழி மூலம் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உதவுகிறது. 

இந்த வசதியை நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கு தொடர்பான கொடுப்பனவுகள் வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி  வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக் கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி முன்னோக்கிச் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது, சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் இணையவழி மூலம் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு உதவுகிறது. இந்த வசதியை நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement