• Nov 14 2024

வடக்கு கிழக்கில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tamil nila / Nov 10th 2024, 7:24 am
image

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 அத்துடன் மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

 மேலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

 அதேநேரம் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை காலை பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். 

 இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


வடக்கு கிழக்கில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்துடன் மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.  மேலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.  அதேநேரம் மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் நாளை காலை பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.  இதேவேளை இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement