• Feb 06 2025

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா நியமனம்?

Sharmi / Dec 10th 2024, 3:57 pm
image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.

இது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளைப் பெற முடிந்தது.

அங்கு அவர்களுக்கு 03 ஆசனங்களும் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன.

அதன்படி தேசிய பட்டியல் ஆசனத்திற்கு  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.


புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா நியமனம் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பைசர் முஸ்தபா கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.இது தொடர்பான யோசனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி 500,835 வாக்குகளைப் பெற முடிந்தது.அங்கு அவர்களுக்கு 03 ஆசனங்களும் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களும் கிடைத்தன.அதன்படி தேசிய பட்டியல் ஆசனத்திற்கு  முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை நியமிக்க கட்சி நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா கட்சியால் முன்மொழியப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement