• Jan 10 2025

வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற போலி வைத்தியர் கைது!

Chithra / Jan 6th 2025, 11:16 am
image


குருநாகல்போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் குருநாகல் - பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற போலி வைத்தியர் கைது குருநாகல்போதனா வைத்தியசாலைக்குள் ஸ்டெதஸ்கோப்புடன் நுழைய முற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்டவர் குருநாகல் - பொத்துஹெர, ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.சந்தேக நபரிடம் இருந்து களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் வைத்திய அடையாள அட்டை மற்றும் ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement