கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 10க்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம், நீர் தேவையை பூர்த்தி செய்து தரப்படவிடவில்லை என குறிப்பிடுகின்றனர்.
12ம் வீதியில் உள்ள மக்களில் 8 குடும்பங்கள் அடுத்தடுத்து வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு அடிப்படை வசதிகள் தொடர்பில் கவலை தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் பெறுவதற்கு மின்கம்பங்கள் நாட்ட மின்சார சபையினர் கம்பத்துக்கான பணம் அறவிடப்படும் என கூறியுள்ளதாகவும், அவ்வளவு பெரும் தொகை பணம் தம்மிடம் இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.
யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் மின்சாரம் இல்லாமையினால் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.
நீரையும் பணம் கொடுத்து வாங்கவேண்டி உள்ளதாகவும், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் மிகவும் வறுமையில் வாழும் அப்பகுதி மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.
கிளிநொச்சியில் மின்சாரம், நீர் இன்றி இன்னலுறும் குடும்பங்கள். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் கிராமத்தில் சுமார் 10க்கு மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம், நீர் தேவையை பூர்த்தி செய்து தரப்படவிடவில்லை என குறிப்பிடுகின்றனர்.12ம் வீதியில் உள்ள மக்களில் 8 குடும்பங்கள் அடுத்தடுத்து வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு அடிப்படை வசதிகள் தொடர்பில் கவலை தெரிவிக்கின்றனர்.மின்சாரம் பெறுவதற்கு மின்கம்பங்கள் நாட்ட மின்சார சபையினர் கம்பத்துக்கான பணம் அறவிடப்படும் என கூறியுள்ளதாகவும், அவ்வளவு பெரும் தொகை பணம் தம்மிடம் இல்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் மின்சாரம் இல்லாமையினால் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது.நீரையும் பணம் கொடுத்து வாங்கவேண்டி உள்ளதாகவும், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் குறித்த பகுதியில் மிகவும் வறுமையில் வாழும் அப்பகுதி மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு கோரிக்கை முன்வைக்கின்றனர்.