• Jul 01 2024

பாம்பு தீண்டி யாழில் குடும்ப பெண் பரிதாபமாக உயிரிழப்பு...!

Sharmi / Jun 28th 2024, 3:55 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.

கொடுக்குளாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் 

சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப் பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும், சம்பவ இடத்திலையே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பாம்பு தீண்டி யாழில் குடும்ப பெண் பரிதாபமாக உயிரிழப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.கொடுக்குளாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப் பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும், சம்பவ இடத்திலையே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement