• Jan 23 2025

கள் அருந்திய குடும்பஸ்தர் திடீர் மரணம் - யாழில் சம்பவம்

Chithra / Jan 22nd 2025, 7:20 am
image

 

யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையில் கள் அருந்திய குடும்பஸ்தர் திடீரென உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவத்தில் சங்குவேலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கள் அருந்திய அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கள் அருந்திய குடும்பஸ்தர் திடீர் மரணம் - யாழில் சம்பவம்  யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் உள்ள கள்ளுத் தவறணையில் கள் அருந்திய குடும்பஸ்தர் திடீரென உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் சங்குவேலி தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த  மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் கள் அருந்திய அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், இளவாலை பொலிஸார் அவரது சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement