தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் நேற்றிரவு சென்னையில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக உமா ரமணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழில் வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'பூங்கதவே தாழ்திறவாய்' என்ற பாடல் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் மனதில் இவர் அழுத்தமாகப் பதிந்தார்.
அதேவேளை, தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், திருப்பாச்சி என 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை இவர் பாடியுள்ளார்.
பிண்ணனி பாடகரான இவரது கணவர் ரமணனும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார்.
அத்தோடு 'பாய்ஸ்' உள்ளிட்ட சில அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் சில ஆண்டுகளாக பாடல் வாய்ப்பு அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக்கச்சேரிகளில் கணவருடன் இணைந்து இவர் பாடி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 69 ஆவது வயதில் நேற்று(01) இரவு காலமானார்.
இவரது திடீர் மறைவானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உமா ரமணனின் இறுதி நிகழ்வுகள் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகி உமா ரமணன் நேற்றிரவு சென்னையில் காலமானார். கடந்த சில மாதங்களாக உமா ரமணன் உடல் நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழில் வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'பூங்கதவே தாழ்திறவாய்' என்ற பாடல் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் மனதில் இவர் அழுத்தமாகப் பதிந்தார்.அதேவேளை, தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், பன்னீர் புஷ்பங்கள், திருப்பாச்சி என 100க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை இவர் பாடியுள்ளார்.பிண்ணனி பாடகரான இவரது கணவர் ரமணனும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். அத்தோடு 'பாய்ஸ்' உள்ளிட்ட சில அவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவ்வாறானதொரு நிலையில் சில ஆண்டுகளாக பாடல் வாய்ப்பு அதிகம் கிடைக்காவிட்டாலும் மேடைக்கச்சேரிகளில் கணவருடன் இணைந்து இவர் பாடி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 69 ஆவது வயதில் நேற்று(01) இரவு காலமானார். இவரது திடீர் மறைவானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் அவருக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் உமா ரமணனின் இறுதி நிகழ்வுகள் சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.