• Apr 04 2025

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

Anaath / Aug 15th 2024, 6:38 pm
image

கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மாவடிவெம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின தந்தையான மா.சுப்பிரமணியம் வயது (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாவடிவெம்பை பிறப்பிடமாக கொண்டாலும் தொழில் நிமித்தம் தமது மனைவியுடன் சின்னமியான்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

நேற்று மாலை (14) வழக்கம் போல் மேச்சலுக்கு சென்ற தமது மாடுகளை கூட்டி  வரும்போது இருள் சூழ்ந்து காணப்பட்டதனால் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.

இவரது அழுகுரல் சத்தம் கேட்டு வாடியில் நின்ற மனைவி   கணவரை  யானையின் தாக்குதலில் இருந்து காப்பற்ற ஓடியபோதும் முயற்சி பலனின்றிபோயுள்ளது.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணைகளை மேற்கொண்ட கோறளைப்பற்று திடிர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்ஆனந்தன் உயிரிழந்தவரின் சடலத்தை உடற் கூற்றாய்விற்காக சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார்.

காட்டு யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னமியான்கல் வயல் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.மாவடிவெம்பைச் சேர்ந்த 5 பிள்ளைகளின தந்தையான மா.சுப்பிரமணியம் வயது (62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மாவடிவெம்பை பிறப்பிடமாக கொண்டாலும் தொழில் நிமித்தம் தமது மனைவியுடன் சின்னமியான்கல் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.நேற்று மாலை (14) வழக்கம் போல் மேச்சலுக்கு சென்ற தமது மாடுகளை கூட்டி  வரும்போது இருள் சூழ்ந்து காணப்பட்டதனால் வழியில் நின்ற யானை அவரை தாக்கியுள்ளது.இவரது அழுகுரல் சத்தம் கேட்டு வாடியில் நின்ற மனைவி   கணவரை  யானையின் தாக்குதலில் இருந்து காப்பற்ற ஓடியபோதும் முயற்சி பலனின்றிபோயுள்ளது.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணைகளை மேற்கொண்ட கோறளைப்பற்று திடிர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேஸ்ஆனந்தன் உயிரிழந்தவரின் சடலத்தை உடற் கூற்றாய்விற்காக சட்ட வைத்திய அதிகாரிக்கு கட்டளை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement