• Jan 25 2025

விவசாயிகளுக்கு ஜனவரி 05ம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு!

Chithra / Dec 30th 2024, 1:03 pm
image

 

2024 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான அனைத்து நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் கிட்டத்தட்ட 80% விவசாயிகளுக்கு  கிட்டத்தட்ட 80 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முடிந்துள்ளது.

மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நட்டஈட்டுத் தொகையை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 

மிகக் கவனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், 2024-2025 பருவகாலம் தொடர்பான நட்டஈடுகளை பெப்ரவரி மாத ஆரம்பத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஜனவரி 05ம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு  2024 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானை தாக்குதலினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான அனைத்து நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரையில் கிட்டத்தட்ட 80% விவசாயிகளுக்கு  கிட்டத்தட்ட 80 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க முடிந்துள்ளது.மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05 ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இங்கு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நட்டஈட்டுத் தொகையை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகக் கவனமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அதேநேரம், 2024-2025 பருவகாலம் தொடர்பான நட்டஈடுகளை பெப்ரவரி மாத ஆரம்பத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now