• Apr 03 2025

கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து – 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் சாவு

Chithra / Aug 27th 2024, 9:10 am
image


  

கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.

அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், 

விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து – 2 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்தில் சாவு   கிளிநொச்சி A9 வீதியில் இன்று காலை 8 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.கனகாம்பிகைக்குளம் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன் அருள்வதனன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.155 ம் கட்டை சந்தியில் ஆட்களை ஏற்றுவதற்காக குறுந்தூர பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்தை முந்திப் பயணித்துள்ளது.அதே திசையில் பயணித்த பார ஊர்தி குறித்த மோட்டார் சைக்கிளை மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே உயிரிழந்துள்ளார்.குறித்த பார ஊர்தியின் சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement