• Nov 28 2024

தமிழரசு கட்சி பிளவுப்படுமோ என்ற அச்சம் - சீ.வீ.கே.சிவஞானம் அதிர்ச்சி தகவல்..!

Chithra / Feb 22nd 2024, 7:59 am
image


இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது கட்சி யாப்பிலும் தெளிவாக உள்ளதென தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. இந்த வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.

பலராலும் பரிகசிக்கப்படுகின்ற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பதற்கு அப்பால் போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்குள் பிளவுபடவிடாமல் செயற்பட வேண்டும்.

இனிமேல் கட்சிக்குள் எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ளமாட்டேன். அதனைத் தவிர்த்து கொள்வேன்.

கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும்.

ஆனாலும் தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகின்ற ஒருவராகவே செயலாளர் இருப்பார். 

அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழரசு கட்சி பிளவுப்படுமோ என்ற அச்சம் - சீ.வீ.கே.சிவஞானம் அதிர்ச்சி தகவல். இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது. இது கட்சி யாப்பிலும் தெளிவாக உள்ளதென தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.யாழ். கல்வியங்காட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கட்சி விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. இந்த வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசி வருகின்றனர்.பலராலும் பரிகசிக்கப்படுகின்ற நிலைக்கு வந்துள்ளோம். இதில் யார் சரி பிழை என்பதற்கு அப்பால் போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்குள் பிளவுபடவிடாமல் செயற்பட வேண்டும்.இனிமேல் கட்சிக்குள் எந்த பதவிக்கும் போட்டி இருக்குமானால் அதில் நான் பங்குகொள்ளமாட்டேன். அதனைத் தவிர்த்து கொள்வேன்.கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும்.ஆனாலும் தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகின்ற ஒருவராகவே செயலாளர் இருப்பார். அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement