• Feb 14 2025

கார் மோதி பெண் பாதசாரி மரணம் : கார் சாரதி கைது

Tharmini / Dec 28th 2024, 2:15 pm
image

மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என, மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கார் மோதி பெண் பாதசாரி மரணம் : கார் சாரதி கைது மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் பலாபத்வல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார் என, மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று (27) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முற்பட்ட பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.மேலும், மாத்தளை, பலாபத்வல பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement