• Apr 23 2025

ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

Chithra / Mar 8th 2025, 9:10 am
image


ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில் 27,500 மெட்ரிக் தொன்களை பயன்படுத்தி 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரித்ததன் மூலம் இது அடையப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.

தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.



ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம் ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று, பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.ரஷ்யாவிலிருந்து இலவசமாகப் பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் MOP உரத்தில் 27,500 மெட்ரிக் தொன்களை பயன்படுத்தி 56,000 மெட்ரிக் தொன் கலப்பு உரத்தைத் தயாரித்ததன் மூலம் இது அடையப்பட்டதாக அமைச்சர் கூறினார்.அதற்கமைய, அந்த கலப்பு உரம், சந்தை விலை அண்ணளவாக 9,500 ரூபாய் கொண்ட 50 கிலோ கிராம் உர மூட்டையை 4,000 ரூபாய் மானிய விலையில் இந்த மாத இறுதியில் நாடு பூராகவும் உள்ள தென்னைப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் என அமைச்சர் தெரிவித்தார்.தென்னை பயிரிச்செய்கையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாண்டில் 2.5 மில்லியன் தேங்காய் விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement