• Dec 09 2024

யாழ்.மாவட்ட செயலகத்தில் மூன்றாம் காலாண்டிற்கான நிதிமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

Tharmini / Oct 17th 2024, 8:46 am
image

யாழ்.மாவட்ட செயலகத்தின், காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (16) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இதன் போது கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும்  தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களைஆராய்ந்தவகையில்  திருப்திகரமாகவிருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி),திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.





யாழ்.மாவட்ட செயலகத்தில் மூன்றாம் காலாண்டிற்கான நிதிமுன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தின், காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (16) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்தின் நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய்வதும், நிதி முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதாகவும்  தெரிவித்ததுடன், இவ் மீளாய்வுக் கூட்டத்தில் நிதி முன்னேற்றங்களைஆராய்ந்தவகையில்  திருப்திகரமாகவிருப்பதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி),திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும்  உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement