• Apr 15 2025

முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள்..! அதிகாலையில் அசம்பாவிதம்

Chithra / Jul 30th 2024, 11:58 am
image


முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு  தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.

குறித்த தீவிபத்து சம்பவம் இன்று   அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.

இதில், இரண்டு கடைகள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் தீ விபத்தின் போது சேதமடைந்துள்ளதுடன், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது. 

இதேவேளை தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை.

இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தீவிபத்தினை கட்டுப்படுத்தும் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் தீப்பிடித்து எரிந்த கடைத்தொகுதிகள். அதிகாலையில் அசம்பாவிதம் முல்லைத்தீவு நகர்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டத்தில் அமைந்துள்ள வணிக நிலையங்கள் இரண்டு  தீ பிடித்து எரிந்து சேதமடைந்துள்ளன.குறித்த தீவிபத்து சம்பவம் இன்று   அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.இதில், இரண்டு கடைகள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் தீ விபத்தின் போது சேதமடைந்துள்ளதுடன், கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளது. இதேவேளை தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை வெளியாகவில்லை.இந்த தீவிபத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிரதேச சபையின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.எனினும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தீவிபத்தினை கட்டுப்படுத்தும் தீயணைப்பு பிரிவு இல்லாத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now