• Nov 22 2024

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை வெளிக்கொண்டுவரும் வேட்பாளர்களுக்கே எமது ஆதரவு; வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரதிநிதி தெரிவிப்பு.

Anaath / Jul 30th 2024, 12:02 pm
image

வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி அதற்கான தீர்வை முன்வைப்பவர்களுக்கு கடற்தொழில் சமூகம் ஆதரவை வழங்குவது தொடர்பில் பரீசீலிக்கும் என  வடமாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்துள்ளார். 

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்தொழிலாளர்கள்  எதிர்கொள்கின்ற பிரச்சனையை ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாக வெளிக் கொண்டு வர வேண்டும்.

இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மட்டுமல்ல ஏனைய அனைத்து வேட்பாளர்களும் வடகிழக்கிலுள்ள  கடற்தொழிலாளர்களின் பிரச்சனையை வெளிக் கொண்டுவந்து அதற்கான தீர்வு என்ன என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிக்கொண்டுவர  வேண்டும். 

ஒற்றுமையாக ஒன்றுபட்டு வடகிழக்கிலே யாருக்கு வாக்களிக்கிறது என்ற முடிவு கடற்தொழில் சமூகம் எடுக்க வேண்டுமேனவும் தீர்மானித்திருக்கிறோம். 

வடகிழக்கிலே அண்ணளவாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கடற்தொழில் சமூகத்தை பிரதிநிதித்துவபடுத்தி இருக்கின்றார்கள்.

எனவே கடற்தொழிலாளர்களின்  பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தினால் வடகிழக்கு இணைந்த ஐந்து இலட்சம் மக்களுடைய வாக்குகளை வழங்குவதைப் பற்றி நாங்கள் பரிசீலிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கடற்தொழிலாளர்களின் பிரச்சினையை வெளிக்கொண்டுவரும் வேட்பாளர்களுக்கே எமது ஆதரவு; வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரதிநிதி தெரிவிப்பு. வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சனைகளை வெளிப்படுத்தி அதற்கான தீர்வை முன்வைப்பவர்களுக்கு கடற்தொழில் சமூகம் ஆதரவை வழங்குவது தொடர்பில் பரீசீலிக்கும் என  வடமாகாண கடற்தொழிலாளர் அமைப்புக்களின் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு  தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடற்தொழிலாளர்கள்  எதிர்கொள்கின்ற பிரச்சனையை ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஊடாக வெளிக் கொண்டு வர வேண்டும்.இத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் மட்டுமல்ல ஏனைய அனைத்து வேட்பாளர்களும் வடகிழக்கிலுள்ள  கடற்தொழிலாளர்களின் பிரச்சனையை வெளிக் கொண்டுவந்து அதற்கான தீர்வு என்ன என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிக்கொண்டுவர  வேண்டும். ஒற்றுமையாக ஒன்றுபட்டு வடகிழக்கிலே யாருக்கு வாக்களிக்கிறது என்ற முடிவு கடற்தொழில் சமூகம் எடுக்க வேண்டுமேனவும் தீர்மானித்திருக்கிறோம். வடகிழக்கிலே அண்ணளவாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கடற்தொழில் சமூகத்தை பிரதிநிதித்துவபடுத்தி இருக்கின்றார்கள்.எனவே கடற்தொழிலாளர்களின்  பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தினால் வடகிழக்கு இணைந்த ஐந்து இலட்சம் மக்களுடைய வாக்குகளை வழங்குவதைப் பற்றி நாங்கள் பரிசீலிப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement