மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025, இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி, ஒரு தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கலாக 11 பதக்கங்களை வென்றுள்ளது.
இதற்காக, மலேசிய அரசு, வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியிருந்தது.
இலங்கை சிலம்ப சம்மேளன பயிற்றுவிப்பாளராக ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளர் ஜெகதீஸ் ஆகியோர் அணியை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டி; பதக்கங்களை அள்ளிய இலங்கை மலேசிய அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிலம்பப் போட்டி 2025, இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மலேசியா, கோலாலம்பூரில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் பங்கேற்ற இலங்கை சிலம்ப அணி சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது.இப்போட்டியில் இலங்கை அணி, ஒரு தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் அடங்கலாக 11 பதக்கங்களை வென்றுள்ளது.இதற்காக, மலேசிய அரசு, வயது பிரிவு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து வீரர்களுக்கான விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கியிருந்தது.இலங்கை சிலம்ப சம்மேளன பயிற்றுவிப்பாளராக ஆசான் ரா. திவாகரனும், முகாமையாளர் ஜெகதீஸ் ஆகியோர் அணியை வழிநடத்தியமை குறிப்பிடத்தக்கது.