சிகை அலங்கரிப்பு நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீரிகம, பல்லேவெல பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
தகவலையடுத்து குறித்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யபப்பட்டுள்ளார்.
சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்திவந்த கல்ஏலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சுற்றிவளைப்பின்போது, 300 கிராம் ஐஸ், 100 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு அளவீட்டு சாதனம், விளையாட்டு துப்பாக்கி, பல்வேறு வடிவங்களில் பல கத்திகள், பல வங்கி அட்டைகள், 46,060 ரூபா பணத்தொகை, 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் மதிப்பு 7.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள “கெமுனு” என்ற நபருடன் இணைந்து இந்த போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிகை அலங்கரிப்பு நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்; சந்தேக நபர் கைது சிகை அலங்கரிப்பு நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம, பல்லேவெல பகுதியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையமொன்றில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மேற்கு மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. தகவலையடுத்து குறித்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யபப்பட்டுள்ளார். சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்திவந்த கல்ஏலிய பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சுற்றிவளைப்பின்போது, 300 கிராம் ஐஸ், 100 கிராம் ஹெரோயின், ஒரு மின்னணு அளவீட்டு சாதனம், விளையாட்டு துப்பாக்கி, பல்வேறு வடிவங்களில் பல கத்திகள், பல வங்கி அட்டைகள், 46,060 ரூபா பணத்தொகை, 3 கையடக்க தொலைபேசிகள் மற்றும் ஒரு மடிக்கணினி என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களின் மதிப்பு 7.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.துபாயில் மறைந்திருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள “கெமுனு” என்ற நபருடன் இணைந்து இந்த போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.