• Sep 15 2025

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Chithra / Sep 15th 2025, 9:17 am
image

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 

1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. 

புதுப்பித்தலின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன. 

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இதற்கிடையில், க்ளின் சிறிலங்கா திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கையும் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம் புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளது. புதுப்பித்தலின் கீழ், புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அம்சங்கள் பேருந்து நிலையத்தில் நிறுவப்படவுள்ளன. புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இலங்கை விமானப்படையால் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கிடையில், க்ளின் சிறிலங்கா திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கையும் இன்று ஆரம்பமாகவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement