நாட்டின் இருவேறு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல பொலிஸ் பிரிவின் மாதிபொல பகுதியில் நேற்று (14) மாலை சோதனை முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது, புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதே நேரத்தில், அகழ்வு நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதிபொல, வெலிகந்த, மில்லவான, தம்மின்ன மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 28-58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், பண்டாரதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை பண்டாரதுவ பொலிஸ் பிரிவின் நவகிரியாவ பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 63 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனடிப்படையில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகழ்வுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது நாட்டின் இருவேறு இடங்களில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கலேவெல மற்றும் பண்டாரதுவ ஆகிய பகுதிகளில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கலேவெல பொலிஸ் பிரிவின் மாதிபொல பகுதியில் நேற்று (14) மாலை சோதனை முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது, புதையல் தோண்டும் நோக்கில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 07 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில், அகழ்வு நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதிபொல, வெலிகந்த, மில்லவான, தம்மின்ன மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 28-58 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதற்கிடையில், பண்டாரதுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை பண்டாரதுவ பொலிஸ் பிரிவின் நவகிரியாவ பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 63 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனடிப்படையில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.