அசாமின் குவஹாத்தியில் இன்று (14) மாலை 4:41 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 5.8 மெக்னிடியுட்டாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வடக்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதுவரை காயம் அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் வௌியாகவில்லை.
கடந்த 2 ஆம் திகதி அசாமில் உள்ள சோனித்பூரில் 3.5 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
சில நாட்களுக்குள் இந்த நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.