• Apr 17 2026

ஈரானின் இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்; 15 தொழிற்சாலை ஊழியர்கள் பலி

Chithra / Mar 15th 2026, 9:10 am
image


ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

 

நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன. 


இஸ்பஹான் தவிர, தெஹ்ரான், தப்ரீஸ், பண்டார் அப்பாஸ் மற்றும் கர்மான் மாகாணத்தின் சிர்ஜான் ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது. 

ஈரானின் இஸ்பஹான் நகர் மீது தாக்குதல்; 15 தொழிற்சாலை ஊழியர்கள் பலி ஈரானின் இஸ்பஹான் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தொழிற்சாலை ஊழியர்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் வெப்பமூட்டிகளைத் தயாரிக்கும் சிவில் தொழிற்சாலை ஒன்றின் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான நகரமான இஸ்பஹானில், இராணுவ மற்றும் சிவில் ஆகிய இரு துறைகளுக்கும் சொந்தமான தொழிற்சாலைகளும், ஈரானின் மிக முக்கியமான பல அணுசக்தி நிலையங்களும் அமைந்துள்ளன. இஸ்பஹான் தவிர, தெஹ்ரான், தப்ரீஸ், பண்டார் அப்பாஸ் மற்றும் கர்மான் மாகாணத்தின் சிர்ஜான் ஆகிய நகரங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.போர் தொடங்கியதில் இருந்து இஸ்பஹான் நகரம் இவ்வாறான தாக்குதல் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement