• Nov 14 2026

PSTA சட்டமூலத்துக்கு எதிரான 26 மனுக்கள்; உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரிடம்!

Chithra / Nov 10th 2026, 12:48 pm
image



‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்’ (PSTA) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.


முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, கடந்த நவம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.


பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.


சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.


இந்நிலையில், விசாரணைகளின் நிறைவில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


இதற்கமைய, தற்போது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

PSTA சட்டமூலத்துக்கு எதிரான 26 மனுக்கள்; உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரிடம் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாத்தல்’ (PSTA) சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கிடைத்துள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியுள்ளது.முன்மொழியப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மைக்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, கடந்த நவம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் குறித்த சட்டமூலத்துக்கு எதிராக மொத்தம் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியிருந்தனர்.இந்நிலையில், விசாரணைகளின் நிறைவில் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதற்கமைய, தற்போது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகரைச் சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement