ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (9) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்,
"தற்போதைக்கு நாம் தற்போதைய நிலையைத் தொடர்ந்து பேணி வருகின்றோம். அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனைச் செய்கின்றோம். ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இருப்பினும், நிலைமை மாறினால் எதிர்கொள்ள அமெரிக்கப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே போர் முடிவடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் போரில் புதிய திருப்பம்; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளை மாளிகையில் நேற்று (9) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப்,"தற்போதைக்கு நாம் தற்போதைய நிலையைத் தொடர்ந்து பேணி வருகின்றோம். அண்டை நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இதனைச் செய்கின்றோம். ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இருப்பினும், நிலைமை மாறினால் எதிர்கொள்ள அமெரிக்கப் படைகள் முழுமையாகத் தயாராக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.மேலும், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே போர் முடிவடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.