• Nov 10 2026

ட்ரோன்கள் இறக்குமதி சர்ச்சை: நளின் பண்டார எம்.பி விளக்கம்

Aathira / Nov 10th 2026, 6:59 am
image

பாதுகாப்பு அமைச்சின் உரிய முன்அனுமதியின்றி 39 ட்ரோன்கள் மற்றும் 16 நுண்-ஒலிவாங்கிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களிடம் பேசிய அவர், கமரா பொருத்தப்பட்ட ட்ரோன் சாதனங்களை வாடகைக்கு வழங்கும் மற்றும் விற்பனை செய்யும் தனது குடும்பத்துக்குச் சொந்தமான தனியார் வணிக நடவடிக்கைகளுக்காகவே இந்தப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.

இந்த வணிகத்தை தனது மகன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார் என்றும், அவரும் தனது தாயாரும் இந்தக் கணினி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தனது மகனின் நிறுவனம், இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிலிருந்து பெற வேண்டிய அவசியமான அனைத்து உத்தியோகபூர்வ அனுமதிகளையும் பெற்றிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், இந்தச் சாதனங்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட வேண்டிய இறுதி அனுமதி பெறப்படவில்லை என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.

அதேவேளை, இந்த உபகரணங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டவை என்றோ அல்லது சுங்கக் கட்டுப்பாடு மற்றும் அனுமதிகளின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டவை என்றோ முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நாங்கள் இந்தத் தொழில்நுட்ப உபகரணங்களைச் சுங்க அனுமதி பெறாமல், சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள் போல நாட்துக்குள் கொண்டு வந்தோம் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறான புரிதலாகும்.

சுங்கத் திணைக்களத்தின் முறையான சோதனை நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.

நாங்கள் ஏதேனும் பொருள்களைச் சுங்கப் பரிசோதனையின்றி மறைமுகமாகக் கொண்டு வந்திருந்தால், சுங்க அதிகாரிகள் அவற்றை விமான நிலையத்திலேயே நேரடியாகக் கைப்பற்றியிருப்பார்கள்." - என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

ட்ரோன்கள் இறக்குமதி சர்ச்சை: நளின் பண்டார எம்.பி விளக்கம் பாதுகாப்பு அமைச்சின் உரிய முன்அனுமதியின்றி 39 ட்ரோன்கள் மற்றும் 16 நுண்-ஒலிவாங்கிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களிடம் பேசிய அவர், கமரா பொருத்தப்பட்ட ட்ரோன் சாதனங்களை வாடகைக்கு வழங்கும் மற்றும் விற்பனை செய்யும் தனது குடும்பத்துக்குச் சொந்தமான தனியார் வணிக நடவடிக்கைகளுக்காகவே இந்தப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தெரிவித்தார்.இந்த வணிகத்தை தனது மகன் ஆரம்பித்து நடத்தி வருகின்றார் என்றும், அவரும் தனது தாயாரும் இந்தக் கணினி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர்களாகச் செயற்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.தனது மகனின் நிறுவனம், இந்தச் சாதனங்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிலிருந்து பெற வேண்டிய அவசியமான அனைத்து உத்தியோகபூர்வ அனுமதிகளையும் பெற்றிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இருப்பினும், இந்தச் சாதனங்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெறப்பட வேண்டிய இறுதி அனுமதி பெறப்படவில்லை என்பதை அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.அதேவேளை, இந்த உபகரணங்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டவை என்றோ அல்லது சுங்கக் கட்டுப்பாடு மற்றும் அனுமதிகளின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டவை என்றோ முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார திட்டவட்டமாக மறுத்துள்ளார்.நாங்கள் இந்தத் தொழில்நுட்ப உபகரணங்களைச் சுங்க அனுமதி பெறாமல், சட்டவிரோதக் கடத்தல் பொருட்கள் போல நாட்துக்குள் கொண்டு வந்தோம் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறான புரிதலாகும்.சுங்கத் திணைக்களத்தின் முறையான சோதனை நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகின்றது.நாங்கள் ஏதேனும் பொருள்களைச் சுங்கப் பரிசோதனையின்றி மறைமுகமாகக் கொண்டு வந்திருந்தால், சுங்க அதிகாரிகள் அவற்றை விமான நிலையத்திலேயே நேரடியாகக் கைப்பற்றியிருப்பார்கள்." - என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement