• Nov 10 2026

முட்டை விலை மீண்டும் உயரப்போகிறதா? நுகர்வோருக்கு அதிர்ச்சித் தகவல்!

Egg
Chithra / Nov 10th 2026, 4:06 pm
image


எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் முட்டையின் விலை 45 முதல் 47 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.


கடந்த சில மாதங்களாக முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையே முட்டையின் விலை படிப்படியாக உயர்வதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 முதல் 34 ரூபாய் வரை காணப்படுகின்றது. இந்நிலையில், நேற்று (9) ஒரு முட்டையின் பண்ணை விலை 35 ரூபாயாகவும், சந்தை விலை 40 ரூபாயாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக, பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்படுகின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி குறைவடைந்து, விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும், டிசம்பர் மாதத்தில் சுற்றுலா விடுதிகளில் முட்டைகளுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு முட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதற்கிடையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை வழங்குவதற்காக முட்டை மீதான வரிகளைக் குறைக்குமாறு இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

முட்டை விலை மீண்டும் உயரப்போகிறதா நுகர்வோருக்கு அதிர்ச்சித் தகவல் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் முட்டையின் விலை 45 முதல் 47 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.கடந்த சில மாதங்களாக முட்டை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளமையே முட்டையின் விலை படிப்படியாக உயர்வதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கான செலவு 32 முதல் 34 ரூபாய் வரை காணப்படுகின்றது. இந்நிலையில், நேற்று (9) ஒரு முட்டையின் பண்ணை விலை 35 ரூபாயாகவும், சந்தை விலை 40 ரூபாயாகவும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காக, பண்ணை உரிமையாளர்கள் முட்டையிடும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முற்படுகின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் முட்டை உற்பத்தி குறைவடைந்து, விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், டிசம்பர் மாதத்தில் சுற்றுலா விடுதிகளில் முட்டைகளுக்கான தேவை அதிகரிக்கக்கூடும் என்பதால், சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு முட்டைகளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கிடையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டைகளை வழங்குவதற்காக முட்டை மீதான வரிகளைக் குறைக்குமாறு இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement