• Sep 15 2025

தேசிய மட்ட பளு தூக்குதல் போட்டியில் சாதித்த திருமலை மாணவிகள்

Aathira / Sep 14th 2025, 10:07 pm
image

தேசிய மட்டத்தில் இடம் பெற்ற பளு தூக்குதல் போட்டியில் திருக்கோணமலையை சேர்ந்த ஐந்து மாணவிகள் தேசிய பதக்கங்களை வென்றனர். 

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திருக்கோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடந்தது. 

இந்த வெற்றிக்கு அத்திவாரமாக காணப்பட்ட பயிற்சியாளர்கள் உமாசுதன், கிரிஜா, மோகனகுமாரி ஆகியோரின் பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

மாணவிகள் பெற்ற பதக்கங்கள் விவரம் பின்வருமாறு:

17 வயதிற்குட்பட்ட 81 கிலோ பிரிவில் ஹரினி - தங்கப்பதக்கம்

20 வயதிற்குட்பட்ட 59 கிலோ பிரிவில் கிஷோதிகா - தங்கப்பதக்கம்

17 வயதிற்குட்பட்ட 71 கிலோ பிரிவில் கோபிகா - வெள்ளிப்பதக்கம்

17 வயதிற்குட்பட்ட 49 கிலோ பிரிவில் சுகல்யா - வெண்கலப்பதக்கம்

20 வயதிற்குட்பட்ட 64 கிலோ பிரிவில் யோமிஷா - வெண்கலப்பதக்கம்

ஹரினியும் கிஷோதிகாவும் தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகளாக இருக்கின்றனர். 

கோபிகா மற்றும் சுகல்யா தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவிகள்.

மேலும் யோமிஷா மல்லிகைத்தீவு மகாவித்தியாலய மாணவி ஆவார். 

தேசிய மட்ட பளு தூக்குதல் போட்டியில் சாதித்த திருமலை மாணவிகள் தேசிய மட்டத்தில் இடம் பெற்ற பளு தூக்குதல் போட்டியில் திருக்கோணமலையை சேர்ந்த ஐந்து மாணவிகள் தேசிய பதக்கங்களை வென்றனர். இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று திருக்கோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடந்தது. இந்த வெற்றிக்கு அத்திவாரமாக காணப்பட்ட பயிற்சியாளர்கள் உமாசுதன், கிரிஜா, மோகனகுமாரி ஆகியோரின் பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.மாணவிகள் பெற்ற பதக்கங்கள் விவரம் பின்வருமாறு:17 வயதிற்குட்பட்ட 81 கிலோ பிரிவில் ஹரினி - தங்கப்பதக்கம்20 வயதிற்குட்பட்ட 59 கிலோ பிரிவில் கிஷோதிகா - தங்கப்பதக்கம்17 வயதிற்குட்பட்ட 71 கிலோ பிரிவில் கோபிகா - வெள்ளிப்பதக்கம்17 வயதிற்குட்பட்ட 49 கிலோ பிரிவில் சுகல்யா - வெண்கலப்பதக்கம்20 வயதிற்குட்பட்ட 64 கிலோ பிரிவில் யோமிஷா - வெண்கலப்பதக்கம்ஹரினியும் கிஷோதிகாவும் தி/சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகளாக இருக்கின்றனர். கோபிகா மற்றும் சுகல்யா தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவிகள். மேலும் யோமிஷா மல்லிகைத்தீவு மகாவித்தியாலய மாணவி ஆவார். 

Advertisement

Advertisement

Advertisement