• Mar 09 2026

புதுவருடத்தன்று கொழும்பில் முதல் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி - இருவர் காயம்

Chithra / Jan 2nd 2026, 7:38 am
image

 


கொழும்பு - நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 


நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர். அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுவருடத்தன்று கொழும்பில் முதல் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி - இருவர் காயம்  கொழும்பு - நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (1) இரவு 10 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய இருவர் காயமடைந்தனர். அவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் தேடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement