• Jan 13 2025

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

Chithra / Jan 3rd 2025, 7:47 am
image

 

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து நேற்று வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.

இதன்போது, நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.

மேலும், எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.

2025 ஆம் ஆண்டு நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்  இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து நேற்று வருகை தந்துள்ளது.குறித்த கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் பிரவேசித்துள்ளது.இதன்போது, நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர்.மேலும், எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement