• Nov 21 2025

வெள்ள நீரால் பிடிக்கபட்ட அதிகளவான மீன் வகைகள்

Chithra / Nov 19th 2025, 1:28 pm
image

அம்பாறை  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு, குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும்  அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக்கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில்  வடிந்தோடும் வெள்ள நீரில்   சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும்  எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது பெய்யும் மழை காரணமாக  நன்னீர் மீன்கள்  அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில்  கோல்டன் செப்பலி, கணையான், கொய் கொடுவா,  பொட்டியான்,   வெள்ளையாபொடி, இறால், நண்டு வகைள்    போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள்  குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

இதனால் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.


வெள்ள நீரால் பிடிக்கபட்ட அதிகளவான மீன் வகைகள் அம்பாறை  மாவட்டத்தில்   பருவ மழை   காரணமாக  அங்குள்ள  ஆறு, குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளிலும்  அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல்  பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக்கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில்  வடிந்தோடும் வெள்ள நீரில்   சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும்  எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது பெய்யும் மழை காரணமாக  நன்னீர் மீன்கள்  அதிகளவாக பிடிக்கப்படுகிறது.இதில்  கோல்டன் செப்பலி, கணையான், கொய் கொடுவா,  பொட்டியான்,   வெள்ளையாபொடி, இறால், நண்டு வகைள்    போன்ற   மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள்  குறைந்த விலையில் விற்பனையாகின்றன.இதனால் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement