இயந்திர படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில், திராய்மடு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு முகத்துவாரம் ஊடாக கடலுக்கு மீன்பிடிக்க இரண்டு மீனவர்கள் இயந்திர படகின் மூலம் சென்றுள்ளனர்.
மீன்பிடித்த பின்னர் இருவரும் இன்று காலை இயந்திர படகினை முகத்துவாரத்தில் உள்ள கடல் நீரும் ஆற்று நீரும் இணையும் இடமான ஆற்றுவாய் ஊடாக மட்டக்களப்பு வாவிக்குள் வந்துகொண்டிருக்கும்போது ஆற்றுவாய் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளது.
இதன்போது அருகில் படகிலிருந்தவர்களினால் ஒருவர் காப்பாற்றப்பட்டதோடு மற்றவரை மீட்கமுடியாத நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியது.
மீட்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மரண விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இயந்திர படகு கவிழ்ந்ததில் மீனவர் பரிதாப மரணம். இயந்திர படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில், திராய்மடு பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் என்பவரே உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு முகத்துவாரம் ஊடாக கடலுக்கு மீன்பிடிக்க இரண்டு மீனவர்கள் இயந்திர படகின் மூலம் சென்றுள்ளனர்.மீன்பிடித்த பின்னர் இருவரும் இன்று காலை இயந்திர படகினை முகத்துவாரத்தில் உள்ள கடல் நீரும் ஆற்று நீரும் இணையும் இடமான ஆற்றுவாய் ஊடாக மட்டக்களப்பு வாவிக்குள் வந்துகொண்டிருக்கும்போது ஆற்றுவாய் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளது.இதன்போது அருகில் படகிலிருந்தவர்களினால் ஒருவர் காப்பாற்றப்பட்டதோடு மற்றவரை மீட்கமுடியாத நிலையில் அவரது சடலம் கரையொதுங்கியது.மீட்கப்பட்ட நபர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சடலத்தினை மரண விசாரணை அதிகாரியின் விசாரணையை தொடர்ந்து பிரேத பரிசோதனைளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.