கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஜஸ்டின் என்ற மீனவர் இன்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.
நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.
இதையடுத்து சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் மீனவரின் உடலை மீட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்றனர்.
மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச் சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு; நடுக்கடலில் பரபரப்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் படகில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ராமேஸ்வரத்தில் இடம்பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஜஸ்டின் என்ற மீனவர் இன்று காலை விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இருந்த மீனவர் கடலில் தவறி விழுந்து மாயமானார்.இதையடுத்து சக மீனவர்கள் கடலில் தேடிய நிலையில் மீனவரின் உடலை மீட்டு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்துச் சென்றனர்.மீனவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச் சம்பவம் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது