அனுராதபுரம், நாச்சாதுவ குளத்தில் தோணி மூலம் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.
நாச்சாதுவ புதிய நகரைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது ஹனீபா முஹம்மது ரஃபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மீன்பிடிப்பதற்காக குளத்துக்குச் சென்ற இவர், அன்றைய தினம் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் குளத்துக்குச் சென்று தேடியபோது, ரஃபீஸ் மீன்பிடிக்கப் பயன்படுத்திய தோணி மட்டும் குளத்தில் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, மூன்று நாள்களின் பின்னர் அவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளத்தில் காணாமல்போன மீனவர் 3 நாள்களின் பின்னர் சடலமாக மீட்பு அனுராதபுரம், நாச்சாதுவ குளத்தில் தோணி மூலம் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன மீனவர் ஒருவர், மூன்று நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஹிதோகம பொலிஸார் தெரிவித்தனர்.நாச்சாதுவ புதிய நகரைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முஹம்மது ஹனீபா முஹம்மது ரஃபீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் மீன்பிடிப்பதற்காக குளத்துக்குச் சென்ற இவர், அன்றைய தினம் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர் குளத்துக்குச் சென்று தேடியபோது, ரஃபீஸ் மீன்பிடிக்கப் பயன்படுத்திய தோணி மட்டும் குளத்தில் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டெடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பலனாக, மூன்று நாள்களின் பின்னர் அவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.மரணம் குறித்த மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.