அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக எமது பிரதேச ஊடகவியலாளரால் சமாச தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பிய நிலையிலையே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
பொலிசார் மற்றும் கடற்தொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை மார்கழி மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும்
தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாளையடி சுற்றுலா கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச தலைவர் தெரிவிப்பு அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக எமது பிரதேச ஊடகவியலாளரால் சமாச தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பிய நிலையிலையே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை,மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பொலிசார் மற்றும் கடற்தொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து விட்டு கார்த்திகை மார்கழி மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும்தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.