• Nov 17 2024

மீனவர் பிரச்சினை சட்ட ரீதியாகவும், இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் - டக்ளஸ் தெரிவிப்பு...!

Anaath / Jun 13th 2024, 10:34 am
image

இந்திய பிரதமர் மோடி இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில்சட்ட ரீதியாகவும் , இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என கடல்தொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று(12)  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றில் மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடற்றொழில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டபோதே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குச் சென்று வந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இந்திய பிரதமரோடும் முக்கிய அமைச்சர்களோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.

இப்பிரச்சினையை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகக் கருதி இரு தரப்பும் சட்ட ரீதியாகவும் , இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினை சட்ட ரீதியாகவும், இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் - டக்ளஸ் தெரிவிப்பு. இந்திய பிரதமர் மோடி இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில்சட்ட ரீதியாகவும் , இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என கடல்தொழில் அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்று(12)  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றில் மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடற்றொழில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டபோதே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்குச் சென்று வந்துள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணம் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இந்திய பிரதமரோடும் முக்கிய அமைச்சர்களோடும் நடத்திய பேச்சுவார்த்தைகளில் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார்.இப்பிரச்சினையை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையாகக் கருதி இரு தரப்பும் சட்ட ரீதியாகவும் , இராஜதந்திர அடிப்படையிலும் தீர்க்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement