• Apr 02 2025

நாடாளுமன்றத் தேர்தல்; உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்!

Chithra / Oct 27th 2024, 8:48 am
image

 

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், அந்த மாவட்டத்திற்கு இன்று விநியோகம் செய்யப்படமாட்டாது என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.


நாடாளுமன்றத் தேர்தல்; உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பம்  நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்ட வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாததால், அந்த மாவட்டத்திற்கு இன்று விநியோகம் செய்யப்படமாட்டாது என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 3ஆம் திகதி விசேட விநியோக தினமாக அறிவிக்கப்பட்டு, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement