• Oct 01 2024

இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி...! இந்திய மீனவர்கள் விடுதலை...!samugammedia

Sharmi / Dec 29th 2023, 11:00 am
image

Advertisement

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவில் கைதான 14 மீனவர்களும் டிசம்பர் 13 ஆம் திகதி காரைநகர் கடற்பரப்பில் கைதான 06 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் அனைவரையும் நேற்றுவரை(28) விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 20 இந்திய மீனவர்களும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடி. இந்திய மீனவர்கள் விடுதலை.samugammedia இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது  கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுலை செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்புகளில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 20 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 6ஆம் திகதி நெடுந்தீவில் கைதான 14 மீனவர்களும் டிசம்பர் 13 ஆம் திகதி காரைநகர் கடற்பரப்பில் கைதான 06 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.குறித்த மீனவர்கள் அனைவரையும் நேற்றுவரை(28) விளக்கமறியலில் வைக்குமாறு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.அதற்கமைய, ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த 20 இந்திய மீனவர்களும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement