• May 26 2026

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி...! இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை...!samugammedia

Ziya / Dec 7th 2023, 9:55 am
image

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நேற்றையதினம் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி. இந்திய மீனவர்களுக்கு ஏற்பட்ட நிலை.samugammedia சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுயாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நேற்றையதினம் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement