• Nov 14 2024

நிலுவைத்தொகையை செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து - ஐந்து மது உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

Chithra / Nov 14th 2024, 9:06 am
image

  

நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலுவைத்தொகையை செலுத்தத் தவறினால் உரிமம் ரத்து - ஐந்து மது உற்பத்தி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை   நவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் நிலுவைத்தொகை செலுத்தப்படாவிட்டால் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனம் உட்பட ஐந்து மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமங்களை இடைநிறுத்த மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.சமூக ஆர்வலர் சஞ்சய் மஹவத்த உள்ளிட்ட குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அழைக்கப்பட்ட போதே மதுவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.இந்த ஐந்து நிறுவனங்களும் செலுத்தாத வரிப்பணத்தின் பெறுமதி ஆறு பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக வழக்கு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த மனுவில், உரிய வரிப்பணத்தை வசூலிக்குமாறு மதுவரி ஆணையர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கவும், வரி செலுத்துவதை புறக்கணிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement