அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் கொலையாளி என குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா என்பவரும் அவருடன் பயணித்த மேலும் நான்கு நபர்களும் கடந்த ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியான கெப் சூட்டி என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது அவரும் இரண்டு உதவியாளர்களும் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் இருந்து செயற்படும் கொஸ்கொட சுஜீ என்றழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவரே இவர்களை இயக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
பெலியத்தையில் ஐவர் சுட்டுக்கொலை - இந்தியாவில் சிக்கிய பிரதான சந்தேகநபர் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் கொலைச் சம்பவத்தின் கொலையாளி என குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா என்பவரும் அவருடன் பயணித்த மேலும் நான்கு நபர்களும் கடந்த ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கொலையாளியான கெப் சூட்டி என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தற்போது அவரும் இரண்டு உதவியாளர்களும் இந்தியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துபாயில் இருந்து செயற்படும் கொஸ்கொட சுஜீ என்றழைக்கப்படும் பாதாள உலகக் கும்பல் தலைவரே இவர்களை இயக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.