அனுராதபுரம் - எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று காலை மாணவர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
தாக்குதலை நடத்திய மாணவரும் அதே பாடசாலையில் 12ஆம் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு மாணவரை தாக்கியபோது, அதனைத் தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் சந்தேகநபரான மாணவர் எப்பாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயம் - இலங்கை பாடசாலையில் அதிர்ச்சி அனுராதபுரம் - எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் இன்று காலை மாணவர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த மாணவர்கள் அனைவரும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.தாக்குதலை நடத்திய மாணவரும் அதே பாடசாலையில் 12ஆம் தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு மாணவரை தாக்கியபோது, அதனைத் தடுக்க முயன்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்துடன் சந்தேகநபரான மாணவர் எப்பாவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமானதாக இல்லை என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.