நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதுடன், 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையும், மீன்பிடிச் சமூகத்தினருக்குப் புயல் மற்றும் காற்றழுத்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் நாளை மாலை 7.00 மணி வரை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன்
இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் கடலுக்குச் செல்வதில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரையிலும், புத்தளத்திலிருந்து கங்கேசன்துறை வரை 50 கி.மீ. வரையிலும் அதிகரிக்கக்கூடும்.புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதேவெளை தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், 'ஆரஞ்சு' நிற அவசர எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.
மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் உட்பட கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை
ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்றைய தினம் காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல்,
நாளை (செப்டம்பர் 21) காலை 6 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (செப்டம்பர் 19) காலை 8:30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழைவீழ்ச்சியின் அடிப்படையில்,
கேகாலை மாவட்டத்தின் மாலிபோடா பகுதியில் அதிகபட்சமாக 103.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தெல்லாவ தேயிலை தொழிற்சாலை பகுதியில் 93.5 மி.மீ மழைவீழ்ச்சியும்
குருதியபொத தேயிலை தொழிற்சாலை பகுதியில் 87.5 மி.மீ மழைவீழ்ச்சியும்
டபிள்யூ.கே.கே லங்கா கோ நிறுவனம் பகுதியில் 83 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் சேர்த்து அப்பகுதியில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி, ஹட்டன் - கினிகத்தேனை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் - நோட்டன் மற்றும் ஹட்டன் - டயகம ஆகிய முக்கிய வீதிகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த கவனத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர் மழையால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதோடு, பெரிய அளவிலான மண்மேடுகள் மற்றும் கற்கள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும், அதனால் வாகனங்களை மிக அவதானமாக இயக்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை காரணமாக சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது நடமாடுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இடி-மின்னலுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பெரிய மரங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கனமழையால் மவுஸாக்கலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்ஸபான, பொல்பிட்டிய, நவலக்ஸபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.
இருப்பினும், மின் உற்பத்திக்கான முக்கிய நீர்த்தேக்கங்களான மவுஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகியவற்றின் நீர்மட்டம், அவற்றின் வான் பாயும் அதிகபட்ச கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 10 அடிகள் பாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையில் வெள்ளப்பெருக்கு, 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை: கனமழை 'ஆரஞ்சு' எச்சரிக்கை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மகாவலி கங்கையை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதுடன், 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையும், மீன்பிடிச் சமூகத்தினருக்குப் புயல் மற்றும் காற்றழுத்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகாவலி கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களும், வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நுவரெலியா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் நாளை மாலை 7.00 மணி வரை நிலச்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.அம்பகமுவ (நுவரெலியா)பஸ்பாகே கோரளை (கண்டி)நாகொட (காலி)பாலின்தநுவர (களுத்துறை)தெரணியகல (கேகாலை)பெல்மடுல்ல, இரத்தினபுரி, குருவிற்ற, நிவித்திகலை (இரத்தினபுரி)ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக, கடலில் காற்றின் வேகம் கணிசமாக அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினர் கடலுக்குச் செல்வதில் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும், வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.கங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மாத்தறையிலிருந்து பொத்துவில் வரை காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 50-60 கி.மீ. வரையிலும், புத்தளத்திலிருந்து கங்கேசன்துறை வரை 50 கி.மீ. வரையிலும் அதிகரிக்கக்கூடும்.புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவெளை தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், 'ஆரஞ்சு' நிற அவசர எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளது.மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் உட்பட கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இன்றைய தினம் காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (செப்டம்பர் 21) காலை 6 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்று (செப்டம்பர் 19) காலை 8:30 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழைவீழ்ச்சியின் அடிப்படையில், கேகாலை மாவட்டத்தின் மாலிபோடா பகுதியில் அதிகபட்சமாக 103.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.தெல்லாவ தேயிலை தொழிற்சாலை பகுதியில் 93.5 மி.மீ மழைவீழ்ச்சியும்குருதியபொத தேயிலை தொழிற்சாலை பகுதியில் 87.5 மி.மீ மழைவீழ்ச்சியும்டபிள்யூ.கே.கே லங்கா கோ நிறுவனம் பகுதியில் 83 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.தற்போது தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவ்வப்போது கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால், அப்பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கனமழையுடன் சேர்த்து அப்பகுதியில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.ஹட்டன் - நுவரெலியா, ஹட்டன் - கொழும்பு, ஹட்டன் - கண்டி, ஹட்டன் - கினிகத்தேனை, ஹட்டன் - மஸ்கெலியா, ஹட்டன் - நோட்டன் மற்றும் ஹட்டன் - டயகம ஆகிய முக்கிய வீதிகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வாகன ஓட்டுநர்கள் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரவிட்டவாறு, மிகுந்த கவனத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் வலய பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.தொடர் மழையால் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதோடு, பெரிய அளவிலான மண்மேடுகள் மற்றும் கற்கள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாகவும், அதனால் வாகனங்களை மிக அவதானமாக இயக்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.கனமழை காரணமாக சிற்றாறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்வதையோ அல்லது நடமாடுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இடி-மின்னலுடன் கூடிய காலநிலை நீடிப்பதால், பெரிய மரங்கள் நிறைந்த பகுதிகளில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கனமழையால் மவுஸாக்கலை, கென்யோன், புரோட்லேன்ட், லக்ஸபான, பொல்பிட்டிய, நவலக்ஸபான, கலுகல, விமலசுரேந்திர, மேல் கொத்மலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.இருப்பினும், மின் உற்பத்திக்கான முக்கிய நீர்த்தேக்கங்களான மவுஸாக்கலை மற்றும் காசல்ரீ ஆகியவற்றின் நீர்மட்டம், அவற்றின் வான் பாயும் அதிகபட்ச கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 10 அடிகள் பாக்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.